போலீஸார் கொடி அணிவகுப்பு :

போலீஸார் கொடி அணிவகுப்பு :
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு ராதாபுரம், கூடங்குளம் திசையன்விளை, உவரி ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகுமாறன், வள்ளியூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா ஆகியோர் தலைமை வகித்தனர்.

திசையன்விளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இட்டமொழி, கஸ்தூரி ரெங்கபுரம், திசையன்விளை பஜார் மற்றும் முக்கிய வீதிகளில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதுபோல் ராதாபுரம், கூடங்குளம், இடிந்தகரை, உவரி, பரதர் உவரி ஆகிய பகுதிகளிலும் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in