தென்காசி அரசு மருத்துவமனையில் - ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் திறப்பு :

தென்காசி அரசு மருத்துவமனையில் -  ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் திறப்பு :
Updated on
1 min read

கரோனா பெருந்தொற்று சிகிச்சைக்காக பிரதமர் நல நிதி மூலமாக நாடு முழுவதும் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. தென்காசியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனையில் நிமிடத்துக்கு 1,000 லிட்டர் அளவில் ஆக்சிஜன் உற் பத்தி செய்யும் நிலையம் ரூ.1.2 கோடி மதிப்பில் நிறுவப் பட்டுள்ளது. இதை காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திரமோடி நேற்று திறந்து வைத்தார்.

இதையொட்டி தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ஜனனி சவுந்தர்யா தலைமை வகித்து ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்தார்.

மருத்துவமனை கண்காணிப் பாளர் ஜெஸ்லின் முன்னிலை வகித்தார். மத்திய அரசு பொதுப்ப ணித்துறை உதவி பொறியாளர் விஜயகுமார், பொறியாளர்கள் சாந்தி சுமிதா, மணிகண்டன், மாநில அரசு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சங்கரலி ங்கம், உதவிப் பொறியாளர் இப்ராஹிம், மின்வாரிய உதவிப் பொறியாளர் பாலகிருஷ்ணன், மருத்துவமனை உறைவிட மருத்துவர் அகத்தியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திரமோடி நேற்று திறந்து வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in