

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்தவர்களை கைது செய்யக் கோரியும், பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கத்பர்ட் தலைமை வகித்தார். பத்மநாபபுரம் நகர காங்கிரஸ் பொறுப்பாளர் புறோடி மில்லர் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர். இதுபோல் தக்கலை தபால் நிலையம் முன்பு பத்மநாபபுரம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ, நகரத் தலைவர் ஹனுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி
சிஐடியு சார்பில் மோகன், பெருமாள், முருகன், ஏஐடியுசி சார்பில் காசிவிஸ்வநாதன், பால கிருஷ்ணன், எச்.எம்.எஸ். சார்பில் சுப்பிரமணியன், பாக்கியம், ஐஎன்டியுசி சார்பில் கண்ணன், மகாராஜன், டிடிஎஸ்எப் சார்பில் சந்தானம், உத்திரம், ஏஐசிசிடியு சார்பில் சங்கரபாண்டியன், கருப்ப சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி