Published : 08 Oct 2021 03:13 AM
Last Updated : 08 Oct 2021 03:13 AM

வேலூர் மாவட்டத்தில் 77.63%, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 80.89% வாக்குப்பதிவு - வாக்கு எண்ணும் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு :

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் 77.63%, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 80.89% வாக்குகள் பதிவான நிலையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறைகள் ‘சீல்’ வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியங்களில் முதற்கட்டமாக நேற்று முன்தினம் (அக்.6) வாக்குப்பதிவு நடை பெற்றது. தேர்தலில் 1,312 பதவிகளுக்கு 2,057 பேர் போட்டி யிட்டனர். தேர்தலுக்காக 862 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டது. தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்ற நிலையில் 77.63% வாக்குகள் பதிவானது.

இதையடுத்து, பலத்த பாது காப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் கொண்டு வரப்பட்டன. காட்பாடி ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கை வேலூர் அரசு சட்டக் கல்லூரியிலும், கே.வி.குப்பம் ஒன்றிய வாக்கு எண்ணிக்கை வித்யாலட்சுமி மெட்ரிக் பள்ளியிலும், குடியாத்தம் ஒன்றிய வாக்கு எண்ணிக்கை கே.எம்.ஜி கல்லூரியிலும், பேரணாம்பட்டு ஒன்றிய வாக்கு எண்ணிக்கை மரித் ஹாஜி இஸ்லாமியில் சாஹிப் கல்லூரியிலும் நடைபெறுகிறது.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு அறையில் வாக்குப்பெட்டிகள் பத்திரமாக வைத்து பூட்டப்பட்டது. பின்னர், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் அந்த அறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும், வாக்கு எண்ணும் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பும் அளிக்கப் பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆற்காடு, திமிரி மற்றும் வாலாஜா ஒன்றியங்களுக்கு உட்பட்ட 6 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், 56 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 123 கிராம ஊராட்சி தலைவர், 816 கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவி என மொத்தம் 1,001 பதவிகளுக்கு 2,707 பேர் களத்தில் இருந்தனர். முதற்கட்ட தேர்தலில் மொத்தம் 80.89% வாக்குகள் பதிவானது

இதையடுத்து, ஆற்காடு ஒன்றியத்துக்கான வாக்குப் பெட்டிகள் ஜி.வி.சி கல்லூரிக்கும், திமிரி ஒன்றிய வாக்குப் பெட்டிகள் கலவை ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கும், வாலாஜா ஒன்றிய வாக்குப் பெட்டிகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரிக்கும் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. அங்கு பாது காப்பு அறைகளில் பெட்டிகள் வைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப் பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x