Published : 07 Oct 2021 03:13 AM
Last Updated : 07 Oct 2021 03:13 AM

சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இன்று இறுதிகட்ட கலந்தாய்வு :

திருப்பூர்: சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இன்று இறுதிகட்ட கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2021-2022-ம் கல்வியாண்டுக்கான இளநிலை பட்ட வகுப்பு (பி.காம் ஐபி, பிபிஏ, பி.காம்.சிஏ) மாணவர் சேர்க்கைக்கான இறுதி கட்ட கலந்தாய்வு இன்று (அக். 7) காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. வணிகவியல் பாடப்பிரிவுகள், பொருளியல், வரலாறு, தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் பாடப்பிரிவுகளில் கூடுதலாக பெறப்பட்ட இடங்களில் சில இடங்கள் காலியாக உள்ளன. ஏற்கனவே, விண்ணப்பித்து கலந்தாய்வில் பங்கேற்று இடம் கிடைக்காதவர்களும், இதுவரை கலந்தாய்வில் பங்கேற்காதவர்களும் கலந்து கொள்ளலாம்.

அறிவியல் பாடப்பிரிவுகளில் குறிப்பாக, கணிதம் பயின்றவர்கள் விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்களும், இதுவரை விண்ணப்பிக்காதவர் களும் பங்கேற்கலாம். பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் இரண்டு நகல்கள், 6 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும். கல்லூரிக்கு செலுத்த வேண்டிய தொகையுடன், பெற்றோருடன் வர வேண்டும். கலந்தாய்வில் கலந்துகொள்ள வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

உடுமலை: உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இன்று இறுதிக்கட்ட கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் கூறியிருப்பதாவது: 2021-22-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 26-ம் தேதி தொடங்கி கலந்தாய்வு மூலம் நடைபெற்று வருகிறது.மொத்தமுள்ள 864 இடங்களுக்கு 847 பேர்சேர்க்கப்பட்டுள்ளனர். காலியாக உள்ள 17 இடங்கள், கூடுதலாக பெற்ற 48 இடங்கள் உட்பட மொத்தமுள்ள 65 இடங்களுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு இன்று(6-ம் தேதி) காலை 10 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெறும். முதுநிலை பாடப்பிரிவில் காலியாக உள்ள இடங்களுக்கு வரும் 8-ம் தேதிகலந்தாய்வு நடைபெறும். ஆர்வ முள்ள மாணவர்கள் பங்கேற்றுபயன்பெறவும். இவ்வாறு கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x