Published : 07 Oct 2021 03:13 AM
Last Updated : 07 Oct 2021 03:13 AM

காங்கயத்தில் சாலை விரிவாக்கப் பணி தாராபுரம் சார்-ஆட்சியர் ஆய்வு :

காங்கயம்: காங்கயத்தில் சாலை விரிவாக்கப் பணிக்காக அகற்றப்படவுள்ள மரங்கள் குறித்து தாராபுரம் சார் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில், கார்மல் பள்ளியில் இருந்து முத்தூர் சாலை பிரிவு வரை ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில், சாலையோரமுள்ள 25 வேப்பமரம், 15 புளியமரங்கள் உள்ளிட்ட 40 மரங்கள் அகற்றப்படவுள்ளன. இந்நிலையில், அகற்றப்படவுள்ள மரங்களை தாராபுரம் சார் ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு மேற்கொண்டார். மேலும், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தனியார் வணிக நிறுவனங்களின் பட்டாசுக் கடை அமையவுள்ள இடங்களையும் ஆய்வு செய்தார் ஆய்வின்போது, காங்கயம் வட்டாட்சியர் சிவகாமி, வருவாய் ஆய்வாளர் கனகராஜ், நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x