

தருமபுரியில் மதுவிலக்கு வழக்கு தொடர்பான வாகனங்கள் நேற்று ரூ.9.47 லட்சத்துக்கு ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மதுவிலக்கு வழக்குகள் தொடர்பாக இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட 89 வாகனங்கள் நேற்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டது. ஏல விற்பனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் தலைமையில், மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி குணசேகரன் முன்னிலையில் நடந்தது.
ஏல விற்பனை மூலம் 89 இருசக்கர வாகனங்களும் ரூ.9 லட்சத்து 47 ஆயிரத்து 417-க்கு விற்பனை செய்யப்பட்டு, தொகை அரசு கணக்கில் செலுத்தப்பட்டது.ஏல விற்பனையின்போது, மதுவிலக்கு அமல்பிரிவு டிஎஸ்பி ராஜா சோமசுந்தரம் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.