Published : 07 Oct 2021 03:14 AM
Last Updated : 07 Oct 2021 03:14 AM

விருத்தாசலத்தில் நாளை முதல் மாநில அளவிலான எறிபந்து போட்டி :

தமிழ்நாடு அளவிலான 19-வது மாநில அளவிலான எறிபந்து போட்டி நாளை முதல் 10-ம் தேதி வரை மூன்று நாட்கள் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சிஎஸ்எம் அறிவியல் மற்றும் கலை கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 19 வயதிற்கு உட்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொள்கின்றனர். இப்போட்டியில் தமிழ்நாடு அணி தேர்வு செய்யப்பட்டு வருகிற 20 முதல் 23 -ம்தேதிவரை தேசிய அளவிலான போட்டிகள் உத்திரபிரதேசம் மாநிலம் கொரக்பூரீல் நடைபெற உள்ளது. இது சார்ந்து கடலூர் மாவட்ட அணி தேர்வு செய்யும் பொருட்டு விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் மாவட்ட எறிபந்து சங்கத்தை தொடர்பு கொள்ளுமாறு கடலூர் மாவட்ட எறிபந்து சங்கம் செயலர் ராஜராஜசோழன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x