Published : 07 Oct 2021 03:15 AM
Last Updated : 07 Oct 2021 03:15 AM

அக்.10-ல் 5ம் கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் :

தமிழக அரசின் உத்தரவுப்படி வரும் 10-ம் தேதி (ஞாயிற்றுகிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தென்காசி மாவட்டத்தில் ஐந்தாவது முறையாக கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதில், 50 ஆயிரம் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு குறைவாகவே உள்ளது. கரோனா தொற்றிலிருந்து தற்காத்து கொள்வதற்கு முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள மையங்களுக்கு ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண்ணுடன் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என, தென்காசி ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் இதுவரை 6,52,854 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி, 1,59,759 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி என, மொத்தம் 8,12,613 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று, சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x