பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் :

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் :

Published on

விருதுநகரில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அய்யாச்சாமி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் குருசாமி, மாநில அமைப்புச் செயலர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் பேசினர்.

பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், மாதந்தோறும் இறுதி நாளன்று ஊதியம் வழங்க வேண்டும், 3-வது ஊதிய மாற்று பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும், நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சதவீத ஓய்வூதிய பலன்களை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 15 அம்சக் கோரிகைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in