வல்லத்தில் அமைச்சர் மஸ்தான் பிரச்சாரம் :

வல்லம் ஒன்றியம், நெகனூர் புதூர் கிராமத்தில் திமுக வேட்பாளர்களுக்கு அமைச்சர் மஸ்தான் வாக்கு சேகரிக்கிறார்.
வல்லம் ஒன்றியம், நெகனூர் புதூர் கிராமத்தில் திமுக வேட்பாளர்களுக்கு அமைச்சர் மஸ்தான் வாக்கு சேகரிக்கிறார்.
Updated on
1 min read

வல்லம் ஒன்றியத்திற்குட்பட்ட அகலுார், நெகனுார் புதுார், அருகாவூர் உள்ளிட்ட இடங்களில் தி.மு.க., வேட்பாளர்களை அறிமுகம் செய்து அமைச்சர் மஸ்தான் பேசியது:

பெண்கள் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய முதல்வர் ஸ்டாலின் அனுமதி வழங்கியிருக்கிறார். அடுத்து, ‘தை பொறந்தால் வழி பிறக்கும்’ என்பதைப் போல் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அறிவிப்பு வர உள்ளது. உங்களுக்கு தேவையான வசதிகளை செய்வதற்காக என்னை முதல்வர் ஸ்டாலின் அனுப்பியுள்ளார். நான் வெண்ணையை போன்றவன் என்னை நெய்யாக்கி பயன் படுத்தி கொள்ளுங்கள். உங்கள் தேவைகளை நிறைவு செய்வதற்கு தி.மு.க., விற்கு உள்ளாட்சித் தேர்தலில் வாக்களியுங்கள் என்றார்.

இதே போல அப்பம்பட்டில் முன்னாள் எம்எல்ஏ செந்தமிழ் செல்வன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in