குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக எம்எல்ஏ வாக்குசேகரிப்பு :

குமராட்சி ஊராட்சி ஒன்றியம் 19-வது வார்டு உறுப்பினர்  தேர்தலில் ஜெயங்கொண்டப்பட்டினத்தில் அதிமுக வேட்பாளருக்கு  எம்எல்ஏ பாண்டியன் வாக்கு சேகரித்தார்.
குமராட்சி ஊராட்சி ஒன்றியம் 19-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் ஜெயங்கொண்டப்பட்டினத்தில் அதிமுக வேட்பாளருக்கு எம்எல்ஏ பாண்டியன் வாக்கு சேகரித்தார்.
Updated on
1 min read

குமராட்சி ஊராட்சி ஒன்றியம் 19-வது வார்டு தேர்தலை யொட்டி அதிமுக எம்எல்ஏ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

குமராட்சி ஊராட்சி ஒன்றியம் 19-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வருகிற 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அந்த வார்டில் அதிமுக சார்பில் சுந்தரமூர்த்தி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் இந்த வார்டுக்கு உட்பட்ட ஜெயங்கொண்டபட்டினம், பெராம்பட்டு, கீழகுண்டலபாடி ஆகிய ஊராட்சிகளில் வீடு, வீடாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் அந்த ஊராட்சிகளுக்கு அதிமுக ஆட்சியில் செய்து தரப்பட்ட அரசு திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவைகளை கூறி வாங்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள், மாவட்ட அவைத்தலைவர் குமார், பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிராசாங்கம், சிதம்பரம் முன்னாள் நகர செயலாளர் தோப்பு சுந்தர், பரங்கிப்பேட்டை ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in