

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கிழக்கு காலனியைச் சேர்ந்தவர் பிரசாந்த்(33). கூலித் தொழிலாளி. இவர், அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜுடன்(32) மகாதானபுரத்தில் இருந்து கிருஷ்ணராயபுரத்துக்கு ராணி மங்கம்மாள் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் நேற்று சென்றுகொண்டிருந்தார்.
தொட்டியப்பட்டி அருகே சென்றபோது, எதிரே வந்த வீரணம்பட்டியைச் சேர்ந்த தற்காலிக மின்வாரிய ஊழியரான சுப்பிரமணியின்(35) இருசக்கர வாகனமும், இவர்கள் சென்ற இருசக்கர வாகனமும் மோதிக்கொண்டன. இதில், பிரசாந்த், சுப்பிரமணி ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
காயமடைந்த புஷ்பராஜ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மாயனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.