தி.மலையில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் :

தி.மலையில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் :

Published on

திருவண்ணாமலை மாவட்டத்தில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் இன்று (5-ம் தேதி) நடைபெறும் என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித் துள்ளார்.

கரோனா ஊரடங்கு காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வந்த வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது. அதில், அனைத்து வகையான குறைதீர்வு கூட்டங்களை நடத்த அனுமதி வழங்கியது.

இதையடுத்து, திருவண்ணா மலை மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய் கிழமையில் நடைபெறும் வட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங் கியுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணா மலை மாவட்டத்தில் மாதந்தோறும் நடைபெறும் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் முதல் செவ்வாய்க்கிழமையான அக்டோபர் 5-ம் தேதி (இன்று) காலை 10 மணியளவில் நடை பெற உள்ளது. ஏற்கெனவே, வழக்கமாக நடைபெற்று வரும் இடங்களில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in