

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் வசுமதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தேசிய தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 23 வகையான பயிர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. முருங்கை, மரவள்ளி, மேரா காய் (சவ்சவ்), பீட்ரூட், அரசாணிக்காய், உருளைக்கிழங்கு, நூல்கோல், கேரட், கறிப்பலா, சேனைக்கிழங்கு, அரசாணி, வெட்சிப்பூ ஆகியவை பயிரிட ஹெக்டேருக்கு, ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. கறிவேப்பிலை, டர்னிப், காளான், பட்டாணி, மிளகாய் மற்றும் வெங்காயத்துக்கு ஹெக்டேருக்கு ரூ.3,750 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. முள்ளங்கி, கொத்தவரை, கொத்தமல்லி மற்றும் பொரியல் தட்டை பயிரிட ஹெக்டேருக்கு ரூ.2,500 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இவற்றில் ஒன்றை, இயற்கை முறையில் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகி பயனடையலாம்” எனத் தெரிவித்துள்ளார்.