Published : 04 Oct 2021 03:12 AM
Last Updated : 04 Oct 2021 03:12 AM

சொத்து வரி : செலுத்துவோருக்குமாநகராட்சி சலுகை :

சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியை சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919-ன்படி, 2-ம் அரையாண்டின் முதல் 15 தினங்களுக்குள் அதாவது அக்.1 முதல் 15-ம் தேதிக்குள் செலுத்தி, சொத்து வரியில் 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை தள்ளுபடி பெற்று பயன் அடையலாம். சொத்து வரியை 15-ம் தேதிக்கு பிறகு செலுத்தும்பட்சத்தில், செலுத்த வேண்டிய தொகையுடன் ஆண்டுக்கு 2 சதவீதம் தனிவட்டி சேர்த்து செலுத்த வேண்டும்.

எனவே, சொத்து உரிமையாளர்கள் சென்னை மாநகராட்சி வலைதளம் (www.chennaicorporation.gov.in) மூலமாக பரிமாற்ற கட்டணம் இல்லாமல், மாநகராட்சி மண்டலம் மற்றும் கோட்ட அலுவலகங்களில் அமைந்துள்ள அனைத்து இ- சேவை மையங்கள், வரி வசூலிப்பாளர்களின் கையடக்க கருவி மூலம் வரி செலுத்தலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x