வன உயிரின வார விழாவை முன்னிட்டு, வன உயிரினங்களை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திருநெல்வேலியில் நடைபெற்ற சைக்கிள் பேரணியில் மாணவர்கள் பங்கேற்றனர். படம்: மு.லெட்சுமி அருண்
வன உயிரின வார விழாவை முன்னிட்டு, வன உயிரினங்களை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திருநெல்வேலியில் நடைபெற்ற சைக்கிள் பேரணியில் மாணவர்கள் பங்கேற்றனர். படம்: மு.லெட்சுமி அருண்

வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி :

Published on

ஆண்டுதோறும் அக்டோபர் 2 முதல் 8-ம் தேதி வரை வன உயிரின வார விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வன உயிரின ங்களை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. திருநெல்வேலி என்ஜிஓ ஏ காலனியில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் இருந்து பேரணியை மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரினக் காப்பாளர் முருகன் தொடங்கி வைத்தார். மேலப்பாளையம் சிக்னல் வரை சென்ற பேரணி மீண்டும் மாவட்ட வன அலுவலகத்தில் நிறை வடைந்தது.

பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். உதவி வனப் பாதுகாவலர் ஷாநவாஷ்கான், வனச்சரக அலுவலர்கள் சரவணன், சுரேஷ், தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர் பாக்கியநாதன் சேவியர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வனச்சரக அலுவலர் கருப்பையா, வனவர் அழகர்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in