

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் 8 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிடுதல் மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றுகின்ற காரணத் தினாலும் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த டி.பாபு, எஸ்.பாஸ்கரன், பி.சையத்கான், கே.வெங்கடேசன், சி.பாண்டியன், சி.கஜேந்திரன், எல்.வெங்கடேசன், எஸ்.அசோக்குமார் ஆகிய 8 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட எல்லா பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள். அவர்களுடன் கட்சியினர் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது” என தெரி வித்துள்ளனர்.