போலீஸாருக்கான இலவச மருத்துவ முகாம் :

திருநெல்வேலி மாநகர காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கான இலவச மருத்துவ முகாம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. படம்: மு.லெட்சுமி அருண்
திருநெல்வேலி மாநகர காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கான இலவச மருத்துவ முகாம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. படம்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

திருநெல்வேலி மாநகர காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கான இலவச மருத்துவ முகாம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி இதயவியல் மருத்துவர்கள் மற்றும் திருநெல்வேலி அரசு காவலர் மருத்துவமனை மருத்துவர் ஜவஹர் மற்றும் மருத்துவ குழு வினர் இம்முகாமில் பங்கேற்று காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

முகாமில் ரத்த அழுத்தப் பரிசோதனை, ரத்த பரிசோதனை, இருதயம் சம்பந்தப்பட்ட மருத்துவம், இசிஜி, எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. திருநெல் வேலி மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையர் கே.சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார். கூடுதல் காவல் துணை ஆணையர் சங்கர், மாநகர நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையர் நாகசங்கர், பாளை உட்கோட்ட காவல் உதவி ஆணையர் பாலச்சந்திரன், நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் பிறைச்சந்திரன், ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் முத்தரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காவலர்களின் வாரிசுகளுக்கு

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருநெல்வேலியில் காவலர்களின் பிள்ளைகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகர காவல்துறையும், டிவிஎஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய இம்முகாமை மாநகர காவல் ஆணையர் செந்தாமரை கண்ணன் தொடங்கி வைத்தார். பொறியியல், கலை அறிவியல், தொழில் நுட்பத்துறையில் பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு முடித்துள்ள காவலர்களின் வாரிசுதாரர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in