

தென்காசி மாவட்டம், கம்பனேரி ஊராட்சி, வலசை கிராமத்தை சேர்ந்த மக்கள் நேற்று கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கெனவே இருந்த வாக்குச் சாவடியை வேறு இடத்துக்கு மாற்றியதைக் கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.வாக்குச்சாவடி இடமாற்றத்தை ரத்து செய்யாவிட்டால் அரசு கொடுத்த அனைத்து ஆவணங் களையும் திருப்பி ஒப்படைத்து, தேர்தலை புறக்கணிக்கப் போவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.