தி.மலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற - மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம் :

தி.மலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற  -  மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம் :
Updated on
1 min read

படித்து வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 6-ம் தேதி தொடங்குகிறது என ஆட்சியர் பா.முருகேஷ் தெரி வித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அரசு மற்றும் தனியார் நிறுவன பணிக்கு விண்ணப்பித்தல், அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுக்கு தயாராகுதல், திறன் மேம்பாட்டு பயிற்சி பெறுதல், சுய தொழிலுக்கான தொழில் திறன் பயிற்சி மற்றும் சுய தொழிலுக்கு மானியத்துடன் வங்கிகளில் கடன் பெறுதல் தொடர்பான விழிப் புணர்வு பயிற்சி முகாம் திமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட உள்ளது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட தொழிற்திறன் பயிற்சி மையம் இணைந்து கோட்ட அளவில் பயிற்சி முகாமை நடத்த உள்ளது. திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 6-ம் தேதியும், ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 11-ம் தேதியும், செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 20-ம் தேதியும் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பயிற்சி நடைபெறும்.

பயிற்சி முகாமுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத் திறனாளி அடையாள அட்டை அசல் மற்றும் நகல், மருத்துவ சான்று அசல் மற்றும் நகல், குடும்ப அட்டை நகல், கல்வி சான்று நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவுள்ள ஒரு புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். விழிப்புணர்வு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அனைத்து வகை மாற்றுத் திறனாளி களை கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in