

உலக நதிகள் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி பொருநை ரோட்டரி சங்கம் , இன்னர் வீல், நம் தாமிரபரணி அமைப்பு ஆகியவை சார்பில் திருநெல்வேலி மணிமூர்த்தீஸ் வரத்தில் தாமிரபரணிக் கரையில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. திருநெல்வேலி மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) மகாலெட்சுமி தொடங்கி வைத்தார். வட்டாட்சியர் செல்வம், ரோட்டரி கிளப் தலைவி சொர்ண லதா அருணாசலம், இன்னர் வீல் தலைவி கோமதி மாரியப்பன், செயலாளர் பவித்ரா கோபிநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.