ராமநாதபுரம், சிவகங்கையில் : லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை : ரூ.8.54 லட்சத்தை கைப்பற்றினர்
ராமநாதபுரம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் நிலத்தரகர், சார்-பதிவாளரிடம் இருந்து ரூ.5.23 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைப்பற்றினர்.
ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் செயல்படுகிறது. இதே கட்டிடத்தில் சார்-பதிவாளர் அலுவலகங்களும் உள்ளன. இந்த அலுவலகத்தின் நுழைவு பகுதியில் உள்ள ராமநாதபுரம் வெளிப்பட்டணம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி உன்னிகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, குமரேசன் உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று மாலை சோதனை செய்தனர்.
அப்போது, அங்கிருந்த வெளிப்பட்டணத்தை சேர்ந்த நிலத்தரகர் பாலசுப்பிர மணியத்திடம் இருந்த ரூ.4.70 லட்சம், வெளிப்பட்டணம் சார்-பதிவாளர் இளங்கோவனிடம் இருந்த ரூ.50 ஆயிரம், அலுவலக உதவியாளர் அன்புராஜ் என்பவரிடம் இருந்த ரூ.3,000 என ரூ.5.23 லட்சத்தை கைப்பற்றி, தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
சிவகங்கை
உதவி செயற்பொறியாளர்கள் சண்முகசுந்தரத்திடம் இருந்து ரூ.40 ஆயிரம், நீலமேகத்திடம் இருந்து ரூ.72 ஆயிரம், இளநிலை வரைவாளர் அருணகிரியிடம் இருந்து ரூ.9 ஆயிரம், திட்ட இயக்குநரின் உதவியாளர் ராஜசேகரிடம் இருந்து ரூ.2.10 லட்சம் என ரூ.3.31 லட்சம் கணக்கில் வராத பணம் கைப் பற்றப்பட்டது.
