

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் பெரம்பலூர் உட்கோட்ட பேரவையின் 8-வது மாநாடு பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
மாநாட்டுக்கு சங்கத்தின் உட்கோட்ட துணைத் தலைவர் காட்டுராஜா தலைமை வகித்தார். கோட்டத் தலைவர் மணிவேல் சிறப்புரையாற்றினார். மாநில துணைத் தலைவர் மகேந்திரன், பொருளாளர் மனோகரன், மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர்.
சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.