Published : 01 Oct 2021 03:20 AM
Last Updated : 01 Oct 2021 03:20 AM

வாக்கு எண்ணும் மையத்துக்கு வாக்குபெட்டிகள் சென்று சேரும்வரை - தேர்தல் அலுவலர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அறிவுறுத்தல்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உள்ளாட்சி தேர் தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கான நடைபெற்ற பயிற்சி வகுப்பில் பேசும் ஆட்சியர் அமர் குஷ்வாஹா.

திருப்பத்தூர்

வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குபெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு போய் சேர்க்கும் வரை தேர்தல் அலுவலர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என ஆட்சியர் அமர் குஷ்வாஹா அறிவுறுத்தியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங் கில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான அமர் குஷ்வாஹா தலைமை வகித்துப் பேசும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 ஒன்றியங்களுக்கு வரும் 6-ம் தேதியும், 2 ஒன்றியங்களுக்கு வரும் 9-ம் தேதியும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், மண்டல அலுவலர்களுக்கு தங்களது மண்டலத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண்ணிக்கை எத்தனை? அந்த வாக்குச்சாவடி மையங்கள் அமைந் துள்ள ஊராட்சிகள் எங்கு உள்ளன? என்ற அடிப்படை விவரங்களை முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதற்காகத்தான் இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மண்டலத்துக்கு உரிய வரை படங்களை மண்டல அலுவலர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இதனை கொண்டு தங்கள் மண்டலத்துக்கு உட்பட்ட முதல் வாக்குச்சாவடியில் இருந்து இறுதி வாக்குச்சாவடி வரை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். மண்டலத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு உரிய வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) விவரங்களை சேகரித்துக் கொள்ள வேண்டும்.

வாக்குப்பதிவுக்கு முதல் நாள் அதாவது, அக்டோபர் 5-ம் தேதி (முதற்கட்ட வாக்குப்பதிவு), அக்டோபர் 8-ம் தேதி (2-ம் கட்ட வாக்குப்பதிவு) அன்று காலை 9 மணிக்கு வாக்குச்சாவடி அலு வலர்களுக்கு 3-ம் கட்ட பயிற்சியும், வாக்குச்சாவடி அலுவலர் நியமன உத்தரவும் வழங்கிட வேண்டும்.

வாக்குச்சாவடி மையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் குறியீட்டை சரிபார்க்க வேண்டும். 200 மீட்டர் இடைவெளியை கடந்து வேட்பாளர்கள் நிற்கிறார்களா? என்பதையும் சரி பார்த்துக்கொள்ள வேண்டும். வாக்குப்பதிவு நாளில் என்னென்ன செய்ய வேண்டும். எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதை இங்கு பயிற்சியில் விளக்கப்படும்.

அதை முழுமையாக கேட்டறிந் துக்கொள்ள வேண்டும். இதில், சந்தேகம் யாருக்காவது ஏற்பட்டால் அதை இங்கேயே கேட்டு தீர்த்துக்கொள்ள வேண்டும்.வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு போய் சேர்க்கும் வரை விழிப்புடன் பணியாற்ற வேண்டும். மேலும், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் தவறாமல் கடைப்பிடித்து, உள்ளாட்சித்தேர்தலை சிறப்பாக நடத்த முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x