

மாவட்ட அமைப்பாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட இணை அமைப்பாளர் சுப்பையா, நகர அமைப்பாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிலக்கோட்டை ஒன்றிய அமைப்பாளர் சந்திரசேகரன் வரவேற்றார். மாநில அமைப்பாளர் சோமசுந்தரம் பேசினார்.
பூசாரிகளுக்கான ஓய்வூதியத் தொகையை ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தி உத்தரவிட்ட முதல்வருக்கும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கும் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. அனைத்து கிராம கோயில் பூசாரிகளுக்கும் மாத ஊக்கத்தொகை வழங்க வேண்டும். கிராமக் கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். அறங்காவலர் குழுவை நியமனம் செய்யும்போது அர்ச்சகர், பூசாரிகளையும் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட இணை அமைப்பாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.