Published : 30 Sep 2021 07:47 AM
Last Updated : 30 Sep 2021 07:47 AM

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள - 43 வகையான பொருட்கள் 90% வந்தடைந்தன : தேர்தலுக்கு முந்தைய நாள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள 43 வகையான பொருட்கள் 90 சதவீதம் வந்தடைதுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவி களுக்கான தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற உள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை முன் னிட்டு வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய அரசியல் கட்சித்தலைவர்களும் தங்களது தேர்தல் சுற்றுப் பயணங்களை தொடங்கி மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் 7 ஒன்றியங்களில் 2 கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக, 1,331 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கு தேவையான வாக்குப்பெட்டிகள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கு, காவல் துறையினர் கண் காணிப்புப்பணிகளில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர்.

வாக்குச்சாவடிகளுக்கு தேவை யான ஸ்டாம்ப் பேட், தீப்பெட்டி, போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல், சிறிய வகையிலான கவர்கள், தேர்தல் பணி சான்றிதழ், தலைமை அலுவலர், ஓட்டுப்பதிவு அலுவலர்கள், உள்ளே, வெளியே ஸ்டிக்கர்கள், ஓட்டுப்பதிவு மைய முகவர்களுக்குரிய சைன் போர்டுகள், 1 பென்சில், 3 ஊதா மற்றும் ஒரு சிவப்பு நிற பால் பாயின்ட் பேனா, 8 ஷீட் வெற்று தாள்கள், 25 பின்கள், 6 சீலிங் வேக்ஸ்கள், 4 மெழுகுவர்த்திகள், 20 மீட்டர் நூற்கண்டு, விரலில் வைக்கக்கூடிய அழியாத மை, 24 டிராயிங் பின்ஸ் உள்ளிட்ட 43 வகையான பொருட்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றிய அலுவல கங்களில் தேர்தல் வாக்குப் பதிவுக்கு தேவையான 43 வகையான பொருட்கள் அந்தந்த மாவட்டங்களின் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வைக் கப்பட்டுள்ளன.

இந்த பொருட்கள் அக்டோ பர் 5-ம் தேதி அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்ல சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் உரிய நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இந்த பொருட்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதா என் பதையும் அதிகாரிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் அதி காரிகள் கூறும்போது, ‘‘ஒருங் கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான 90 சதவீத பொருட்கள் வந்து சேர்ந்துவிட்டன. இன்னும் 2 நாட்களுக்குள் அனைத்து பொருட்களும் வந்து சேர்ந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். தேர் தலுக்கு முந்தைய நாள் வாக்குச் சாவடிகளுக்கு இந்த பொருட்கள் பிரித்து அனுப்பி வைக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x