முத்துரங்கம் அரசு கல்லூரியில் 4 மற்றும் 5-ம் கட்ட கலந்தாய்வு : இன்றும், நாளையும் நடக்கிறது

முத்துரங்கம் அரசு கல்லூரியில்  4 மற்றும் 5-ம் கட்ட கலந்தாய்வு :  இன்றும், நாளையும் நடக்கிறது
Updated on
1 min read

வேலூர் அரசு முத்துரங்கம் கல்லூரி யில் 4 மற்றும் 5-ம் கட்ட கலந் தாய்வுக்கூட்டம் 2 நாட்களுக்கு நடைபெற உள்ளது என கல்லூரி முதல்வர் மலர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரியில் 4 மற்றும் 5-ம் கட்ட கலந்தாய்வு இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.

பிஏ தமிழ், பிஏ ஆங்கிலம், பிஏ வரலாறு, பிஏ பொருளியல், பி.காம், பி.பி.ஏ., பிஎஸ்சி கணிதம், பிஎஸ்சி இயற்பியல், பிஎஸ்சி வேதியியல், பிஎஸ்சி கணினி அறிவியல், பிஎஸ்சி விலங்கியல், பிஎஸ்சி ஊட்டச்சத்து மற்றும் உணவுக்கட்டுப்பாட்டியல் ஆகிய 12 பாடப்பிரிவுகளில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு 25 சதவீதம் கூடுதல் இடங்களுக்கு மட்டுமே மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

எனவே, இன்று (30-ம் தேதி) காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ள 4-ம் கட்ட கலந்தாய்வில் கட் -ஆப் மதிப்பெண்கள் 309.9 முதல் 291 வரையிலான மாண வர்கள் கலந்து கொள்ளலாம்.

இதனையடுத்து, 5-ம் கட்ட கலந்தாய்வு நாளை (1-ம் தேதி) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ள கலந்தாய்வில் கட்-ஆப் மதிப்பெண்கள் 290.9 முதல் 271 வரை யிலான மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் மாண வர்கள் தங்களது பெற்றோருடன் வருவதை தவிர்த்து, கரோனா தடுப்பு பாதுகாப்பு கவசங்களுடன் வர வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in