

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் வாகனங்கள் மூலம் மாவட்ட அளவில் பிரச்சாரம் செய்வதற்கு ஆட்சியர் அலுவலகத்திலும், வட்டார அளவில் பிரச்சாரம் செய்வதற்கு வேட்பாளர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் வாகன அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், தேர்தல் தொடர்பான கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு அனுமதி பெற சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என, தென்காசி ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.