Published : 29 Sep 2021 03:23 AM
Last Updated : 29 Sep 2021 03:23 AM

வேலூர் மாவட்டத்தில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் - ரூ.90 லட்சத்தில் 24 மணி நேரமும் ஒளிரும் சிக்னல் விளக்குகள் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தகவல்

வேலூர் மாவட்டத்தில் விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க ரூ.90 லட்சம் மதிப்பில் 18 முக்கிய சந்திப்புகளில் 24 மணி நேரமும் செயல்படும் ஒளிரும் சிக்னல் விளக்குகள், எச்சரிக்கை பதாகைகள் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் விபத்துகள் மற்றும் விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்பு களை தவிர்க்கும் நடவடிக்கை களை மாவட்ட காவல் நிர்வாகம் எடுத்து வருகிறது. மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ் சாலைகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற விபத்து கள், உயிரிழப்புகள், சிறு விபத்துகள் குறித்த முழுமையான ஆய்வு மேற்கொள் ளப்பட்டது.

உதாரணமாக, கடந்த 5 ஆண்டுகளில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் ஏற்பட்ட விபத்துகளை ஆய்வு செய்ததில் பள்ளிகொண்டா அருகேயுள்ள கந்தனேரி பகுதியில் மட்டும் நடைபெற்ற விபத்துகளில் 19 பேரும், விரிஞ்சிபுரம் பகுதியில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற இடங்களில் விபத்துகளின் எண்ணிக் கையை குறைக்க ஒளிரும் சிக்னல் விளக்குகள், எச் சரிக்கை பலகைகள் வைப்பது உள்ளிட்டவை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தனர்.

18 கரும்புள்ளி இடங்கள்

வேலூர் மாவட்டத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் 18 இடங்களை ‘கரும்புள்ளி’ பகுதிகளாக தெரிவு செய்யப்பட்டது. இதில், கந்தனேரி, சாத்து மதுரை, காட்பாடி கூட்டுச்சாலை, பென்னாத்தூர் சந்திப்பு, சித்தேரி பெண்கள் சிறை சந்திப்பு, கண்ண மங்கலம் அருகேயுள்ள கன்னி கோயில் வனத்துறை சோதனைச்சாவடி, தொரப் பாடி வேளாண் அலுவலர் அலுவலகம், குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஏரிக் கரை, கே.வி.குப்பம் அருகே பெருமாங்குப்பம், அர்ஜூனா புரம், குடியாத்தம் அருகே பாக்கம் வளைவு, பேரணாம்பட்டு செர்லப்பல்லி சாலை திருப்பம், அரியூர் ஸ்பார்க் பள்ளி சந்திப்பு, வல்லண்டராமம் சந்திப்பு, மூலகேட் சந்திப்பு, காட்பாடி குளூனி பள்ளி சந்திப்பு, திருவலம் துணை மின் நிலையம் சந்திப்பு, தாராபடவேடு என 18 இடங்கள் ஆகும்.

ரூ.90 லட்சத்தில் திட்டம்

அடிக்கடி விபத்துகள் நடைபெறும் இடங்களில் ரூ.90 லட்சம் மதிப்பில் 24 மணி நேரமும் ஒளிரும் சிக்னல் விளக்குகள், எச்சரிக்கை பலகைகள், சாலை குறியீடுகள் வரையும் பணிகளை முடித்துள்ளனர்.

அதேபோல், போக்குவரத்து காவல் பிரிவின் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி சந்திப்பு, காட்பாடி-குடியாத்தம் சாலை சந்திப்பு, குடியாத்தம் நேதாஜி சவுக் சந்திப்பு, குடியாத்தம் கொச அண்ணாமலை தெரு, குடியாத்தம் சித்தூர் கேட் சந்திப்புகளில் சிக்னல்கள் அமைத்துள்ளனர்.

இது தொடர்பாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் செல்வகுமார், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகள் ஏற்படும் இடங்களை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அடையாளம் கண்டனர்.

அந்த இடங்களில் நானே நேரில் ஆய்வு செய்து பிறகு சாலை பாதுகாப்பு நிதியில் இருந்து ஒளிரும் சிக்னல் விளக்குகள், 107 இடங்களில் 148 எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

சிக்னல்கள் தடை யில்லாமல் இயங்க உள்ளாட்சி அமைப்பு களின் உதவியுடன் மின் வசதி அளிக்கப்பட்டுள்ளது. ஒளிரும் சிக்னல்களால் விபத்துகளின் எண்ணிக்கை குறைய வாய்ப் புள்ளது’’ என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x