சேலத்தில் இன்று 231 இடங்களில் காய்ச்சல் முகாம் :

சேலத்தில் இன்று 231 இடங்களில் காய்ச்சல் முகாம்   :
Updated on
1 min read

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க சேலம் மாவட்டத்தில் சுகாதார சார்பில் இன்று (28-ம் தேதி) 231 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடக்கவுள்ளது.

சேலம் ஊரகப் பகுதியில் 49 மண்டலங்களில் 172 காய்ச்சல் பரிசோதனை முகாம்களும், நகரப் பகுதிகளில் 4 மண்டலங்களில் 11 முகாம்களும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சேலம் மாநகராட்சி பகுதியில் 16 மண்டலங்களில் 48 முகாம்கள் என மாவட்டத்தில் மொத்தம் 69 மண்டலங்களில் 231 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்படவுள்ளது. இந்த முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் நளினி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனிடையே, நேற்று சேலம் மாவட்டத்தில் 64 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in