விவசாயி விஷம் குடித்து தற்கொலை : உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

விவசாயி விஷம் குடித்து தற்கொலை :  உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் இடையார் ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(62), விவசாயி. இவர், உடையார்பாளையத்தைச் சேர்ந்த செந்தில் என்பவருக்கு ஜெயங்கொண்டம் மேலக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவரிடம் வட்டிக்கு பணம் வாங்கிக் கொடுத்துள்ளார்.

பணம் கொடுத்து ஓராண்டான நிலையில், பணத்தை வாங்கிய செந்தில் தலைமறைவானதால் மனமுடைந்த சுப்பிரமணியன் கடந்த 21-ம் தேதி விஷம் குடித்தார். தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இதற்கிடையே, பிரேத பரிசோதனைக்குப் பிறகு சுப்பிரமணியனின் சடலம், நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டபோது, அதை வாங்க மறுத்த உறவினர்கள், “செந்திலுக்குப் பதிலாக வட்டியுடன் அசலை சுப்பிரமணியன் கொடுத்துவிட்டபோதும், கூடுதல் வட்டி கேட்டு வற்புறுத்திய நடராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினர். போலீஸார் சமாதானப்படுத்தியதால், சுப்பிரமணியனின் சடலத்தை பெற்றுக்கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in