

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் வரகுபாடி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (35). இவரது மனைவி பிரியங்கா (25). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன.
குடும்ப பிரச்சினை காரணமாக பிரியங்கா நேற்று வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை தன் மீதும், தனது 6 மாதக் குழந்தைமீதும் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
இதில் இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மருவத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.