வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் - 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,212 பேர் கைது

வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங்கள், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் வேலூர் அண்ணா சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அடுத்த படம்:   வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர். கடைசிப் படம்:  தி.மலை மாவட்டம் களம்பூர் ரயில் நிலையத்தில் ரயில் முன்பு மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்திய காவல் துறையினர்.

Updated on
1 min read

வேலூர், திருப்பத்தூர், திருவண் ணாமலை மாவட்டங்களில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர் தலைமை தபால் நிலையம் எதிரே மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, வேலூர் அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் அலு வலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முன்னாள் எம்.எல்.ஏ., ஜி.லதா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி அதே இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிஐடியு மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன், ஏ.ஐ.டி.யு.சி மாவட்டச் செயலாளர் சிம்புதேவன், தொ.மு.ச மாவட்ட கவுன்சில் செயலாளர் சுப்பிரமணி, எச்.எம்.எஸ் சங்க மாவட்டச் செயலாளர் திருப்பதி, ஐ.என்.டி.யு.சி சங்க மாவட்ட பீடி சங்க பொருளாளர் சேகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசின் வேளாண் சட்டங் களை ரத்து செய்யக் கோரி முழக்க மிட்டனர்.

திருப்பத்தூர்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகம் முன்பு தொடங்கிய பேரணி, மத்திய பேருந்து நிலையம் முன்பு முடிந்தது. பின்னர், அங்கு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். அவர்களை, காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், வந்தவாசி, ஆரணி, செங்கம், செய்யாறு, சந்தவாசல், கலசப்பாக்கம், போளூர், சேத்துப் பட்டு உட்பட மாவட்டத்தில் 22-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது. இதில் 1,140 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரயில் மறியல்

களம்பூர் ரயில் மறியலில் 15 பேரும், கண்ணமங்கலம் ரயில் மறியலில் 17 பேரும், வெறையூர் ரயில் மறியலில் 40 என மொத்தம் 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 25 இடங்களில் நடைபெற்ற ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் 1,212 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in