

உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரை தாக்கியதாக அதிமுக கள்ளக்குறிச்சி ஒன்றிய செயலாளர் ராஜசேகர் மீது கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக் கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 11-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் அலமேலு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த அனைவரும் வாபஸ் பெற்றனர். திமுக வேட்பாளர் அலமேலு மட்டுமே தேர்தலில் போட்டியிடுகிறார் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் சான்று வழங்கினார்.
இதை தொடர்ந்து அதிமுக வேட்பாளர் வேட்புமனுவை வாபஸ் பெறவில்லை எனக்கூறி அதிமுகவினர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாமிதுரை யிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தின் போது அங்கு வந்த கள்ளக்குறிச்சி அதிமுக ஒன்றியச் செயலாளர் ராஜசேகர் திடீரென உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாமிதுரையை கன்னத்தில் அறைந்ததாகக் கூறப் படுகிறது.
இதையடுத்து சாமிதுரை கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருப்பினும் புகார் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை எனக்காவல் துறை தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளர் வேட்புமனுவை வாபஸ் பெறவில்லை எனக்கூறி அதிமுகவினர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாமிதுரையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.