தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் - கடல் உணவுப் பொருட்களில் தொழில் முனைதல் பயிற்சி :

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நடைபெற்ற  ‘கடல் உணவுப் பொருட்களில் தொழில் முனைதல்’ பயிற்சியில் பங்கேற்ற அன்னம்மாள் கல்வியியல் கல்லூரி மாணவிகள்.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நடைபெற்ற ‘கடல் உணவுப் பொருட்களில் தொழில் முனைதல்’ பயிற்சியில் பங்கேற்ற அன்னம்மாள் கல்வியியல் கல்லூரி மாணவிகள்.
Updated on
1 min read

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 'கடல் உணவுப் பொருட்களில் தொழில் முனைதல்' குறித்த தொழில்நுட்ப செயல் விளக்கப் பயிற்சி நடைபெற்றது.

கல்லூரியின் மீன்பதன தொழில்நுட்பத் துறைத் தலைவர் பா.கணேசன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் (பொ) ந.வ.சுஜாத்குமார் பயிற்சியை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியைச் சேர்ந்த 35 மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

மாணவியருக்கு கடற்பாசி சேர்த்த அடுமனை (பேக்கரி) உணவுப்பொருட்கள், மீன் சேர்த்த ரொட்டி தோய்ந்த உணவுப்பொருட்கள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு குறித்து செயல் விளக்கப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. மீன் வளக் கல்லூரி முதல்வர் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in