

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, திருநெல்வேலியில் அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொமுச அமைப்புச் செயலாளர் தர்மன் தலைமை வகித்தார். ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் காசிவிஸ்வநாதன், சிஐடியு மாவட்டச் செயலாளர் மோகன், ஏஐடியூசி போக்குவரத்து கழக பொதுச்செயலாளர் உலகநாதன், எச்எம்எஸ் மாநில துணைத் தலைவர் சுப்பிரமணியன், பணியாளர் சம்மேளன பொதுச்செயலாளர் சந்தானம் மற்றும் ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதுபோல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஏஐசிசிடியூ தொழிற் சங்கம் சார்பில் தாழையூத்து நவீன அரிசி ஆலைமுன் வாயிற்கூட்டம் நடத்தப்பட்டது. சங்கத்தின் மாநில தலைவர் சங்கரபாண்டியன், ஏஐசிசிடியூ மாவட்ட பொதுசெயலாளர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.