இ.எஸ்.ஐ.சி. மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு :

இ.எஸ்.ஐ.சி. மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு :
Updated on
1 min read

திருநெல்வேலி இஎஸ்ஐசி மண்டல துணை இயக்குநர் எஸ். கிருஷ்ணகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இஎஸ்ஐ கழகத்தில் காப்பீடு செய்த நபர்களின் வாரிசுகளிடமிருந்து, காப்பீட்டு நபர் இடஒதுக்கீட்டின்கீழ், இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் 2021-2022-ம் கல்வி யாண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். சேர்க்கைக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் தகுதி பெற்ற இஎஸ்ஐ காப்பீட்டு நபர்களின் வாரிசுகள் வரும் 27-ம் தேதி இரவு 11.59 மணி வரை இணையவழியாக விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு www.esic.nic.in மற்றும் www.mcc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் இதர ஆவணங்களை வரும் 28-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட இஎஸ்ஐ கிளை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக இஎஸ்ஐசி கிளை அலுவலகம் மற்றும் துணை மண்டல அலுவலகம் ஆகியவை வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஹோட்டலில் இருந்த பாத்திரங்கள், நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in