Published : 24 Sep 2021 03:24 AM
Last Updated : 24 Sep 2021 03:24 AM

நான் நினைத்திருந்தால் - திமுகவினர் மீது பல வழக்குகளை போட்டிருப்பேன் : எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தகவல்

உள்ளாட்சி தேர்தல் குறித்து திருப்பத்தூரில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பேசும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.

திருப்பத்தூர்

நான் நினைத்திருந்தால் திமுகவினர் மீது பல்வேறு வழக்குகளை போட்டிருப்பேன் என திருப்பத் தூரில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவி்ததார்

திருப்பத்தூரில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோ சனைக்கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது, "உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். தமிழகத்தில் பெரிய மாவட்டமாக இருந்த வேலூர் மாவட்டம் அதிமுக ஆட்சிக்காலத்தில் 3-ஆக பிரிக்கப்பட்டது. இதற்கு முழு காரணமாக இருந்தவர் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி.

‘நீட்' தேர்வு ரத்து செய்வதாக கூறி பொய் பிரச்சாரம் செய்து அதற்கான எந்த முயற்சியும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களுக்கு திமுக தற்போது அடிக்கல் நாட்டி வருகிறது.

திமுக ஆட்சி அமைந்து கடந்த 4 மாதங்களில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அவதூறு பரப்பி பொய் வழக்குகளை போட்டு வருகிறது. தமிழகத்தில் முதலைமைச்சராக நான் 4 ஆண்டு கள் 2 மாதங்கள் இருந்தேன்.

நான் நினைத்திருந்தால் திமுகவினர் மீது பல்வேறு வழக்கு களை போட்டு இருப்பேன். ஆனால், நாங்கள் அப்படி செய்யவில்லை. மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு பணியாற்றினோம். தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று மக்களுக்கு சேவை செய்ய வாய்ப் பளிக்க வேண்டும்’’ என்றார்.

இதில், திருப்பத்தூர் நகரச் செயலாளர் டி.டி.குமார், வாணி யம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.வீரமணி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x