விழுப்புரம் மாவட்டத்தில் - வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு :

கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்  விவரங்கள் கணனியில் பதிவேற்றம் செய்யப்படுவதை தேர்தல் பார்வையாளர் பழனிசாமி, ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தனர்.
கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர் விவரங்கள் கணனியில் பதிவேற்றம் செய்யப்படுவதை தேர்தல் பார்வையாளர் பழனிசாமி, ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தனர்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குஎண்ணும் மையங்களில் உள்

ளாட்சித் தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர்மோகன் ஆகியோர் விழுப்புரம்அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகளை நேற்று ஆய்வு செய்தனர். வாக்குகள் எண்ணும் இடம், தடையில்லா மின்சார வசதி, தேர்தல் பார்வையாளர் அறை, தேர்தல் நடத்தும் அலுவலரின் அறை, காவல் கட்டுப்பாட்டு அறை, கணினி அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முழுமையாக ஏற்படுத்திட வேண்டும் என ஆட்சியர் அறிவுரை வழங்கினார். தொடர்ந்து சாலை அகரத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடி மையத்தை ஆய்வு செய்தனர்.

மேலும் கோலியனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட் பாளர்களின் வேட்பு மனுக்கள் முறையாக கணினியில் பதிவேற்றம் செய்யப்படுவதையும் ஆய்வு செய்தனர். எஸ்பி நாதா,மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in