

போலீஸார் நடத்திய விசாரணையில், கதிரவனுக்கும் காவனவயலைச் சேர்ந்த பெரியசாமி (30), வீரபாண்டி (25) ஆகியோருக்கும் இடையே நிலப் பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. அதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து பெரியசாமியையும், வீரபாண்டியையும் போலீஸார் நேற்று கைது செய்தனர்.