

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட மன்றத்தில் நாளை(செப்.24) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நீர்ப்பாசனம், வேளாண்மை சார்ந்த கடன் உதவிகள், இடுபொருட்கள், இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் குறித்த முறையீடுகள் விவாதிக்கப்படும். இதில், விவசாயிகள் பங்கேற்று, தங்களின் குறைகளை தெரிவித்து பயனடையலாம் என ஆட்சியர் ப. வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.