அரியலூரில் உள்ளாட்சித் துறை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் :

அரியலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உள்ளாட்சித்துறை தொழிலாளர்கள்.
அரியலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உள்ளாட்சித்துறை தொழிலாளர்கள்.
Updated on
1 min read

அரியலூர் அண்ணா சிலை அருகே உள்ளாட்சித் துறை தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் டி.தண்டபாணி தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், பல ஆண்டுகளாக குறைந்த கூலியில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொடர்ந்து, ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in