நெல்லை கோபாலசமுத்திரம் பகுதியில்  -  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மரணம் :

நெல்லை கோபாலசமுத்திரம் பகுதியில் - பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மரணம் :

Published on

திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் கபிலன்(38) திடீரென்று உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையம் தேசிகாபுரத்தைச் சேர்ந்தவர் கபிலன். கடந்த சில நாட்களுக்குமுன் கோபால சமுத்திரம் பகுதியில் பாதுகாப்பு பணிக்காக வந்திருந்தார். ஏற்கெனவே உடல்நலம் பாதிக்கப் பட்டிருந்த அவர், நேற்று திடீரென்று மயங்கி விழுந்தார்.

உடனடியாக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடலுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி வண்ணன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in