Published : 23 Sep 2021 03:13 AM
Last Updated : 23 Sep 2021 03:13 AM

ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் - நோய் தடுப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் : பொதுமக்களுக்கு ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள்

ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் நோய் தடுப்புப்பணிகளுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருதால் மழை காலங்களில் ஏற்படும் நோய் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நோய் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.

அதன்படி, மாவட்டம் முழுவதும் குடியிருப்புப் பகுதிகள், வணிகவளாகங்கள், தொழில் நிறுவனங்களிடம் டெங்கு கொசு புழு உற்பத்தியை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 23-வது வார்டில் வீதி, வீதியாக சென்ற மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அங்கு டெங்கு காய்ச்சல் போன்ற பாதிப்பு யாருக்கேனும் ஏற்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்தார்.

இதையடுத்து, டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் 23-வது வார்டில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அங்கு வீதிகளில் குவிந்திருந்த குப்பைக் கழிவுகள் அகற்றப்பட்டன. மேலும், வீடு, வீடாக சென்ற மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் பொதுமக்களிடம் வீடுகளில் பயன் படுத்தாத பொருட்களில் சேரும் மழைநீர், தண்ணீரை அகற்றும் படியும், இருப்பிடங்களை எப் போதும் தூய்மையுடன் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அதேபோல, டெங்கு கொசு ஒழிப்புப்பணியாளர்கள் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் தினசரி தவறாமல் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். கழிவுநீர் கால்வாய்களை தூய்மைப்படுத்தி அங்கு கொசு மருந்து தெளிக்க வேண்டும். கொசு ஒழிப்புப்பணியாளர்களின் தினசரி பணிகளை நகராட்சி அலுவலர்கள் முறைப்படுத்தி தர வேண்டும். அவர்களுக்கு தேவையான பாது காப்பு உபகரணங்களை வழங்க வேண்டும்.

சுகாதாரப்பணியாளர்கள், நகராட்சி அலுவலர்கள் வீடு, வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு குறித்தும், டெங்கு காய்ச்சல் குறித்தும் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். டெங்கு மட்டும் அல்ல கரோனா பரவல் குறைந்து விட்டதாக பொதுமக்கள் கருதுகின்றனர். எனவே, கரோனா குறித்த விழிப் புணர்வும், முகக்கவசம் அணிய வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண் டும் என்பதை மக்களுக்கு எடுத் துரைக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு கண்ட றியப்பட்டால் அந்த கடை களுக்கு நகராட்சி மற்றும் வருவாய்த் துறை யினர் ‘சீல்' வைக்க வேண்டும்.

ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நோய் தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என அவர் வேண்டு கோள் விடுத்தார்.

இதனைத்தொடர்ந்து, புதுத் தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற் கொண்டார். அதன்பிறகு, வாலாஜா நகராட்சி 21-வது வார்டு காந்தி நகர் பகுதி மற்றும் மேல்விஷாரம் நகராட்சி 6-வது வார்டில் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

அப்போது, நகராட்சி ஆணையாளர்கள் ஜெய ராமராஜா, மகேஸ்வரி, திருமால் செல்வம், வட்டாட்சியர்கள் ஆனந்தன், கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x