சேரன்மகாதேவி அருகே - 12 அடி நீள ராஜநாகம் பத்திரமாக மீட்பு :

சேரன்மகாதேவி அருகே 12 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வனத்துறையினர் மீட்டனர்.
சேரன்மகாதேவி அருகே 12 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வனத்துறையினர் மீட்டனர்.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே 12 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வனத்துறையினர் மீட்டனர்.

சேரன்மகாதேவி அருகே கோவிந்தபேரி பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய பண்ணையில் ராஜநாகம் இருப்பதாக கடையம் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநர் சே.செண்பகப்பிரியா மற்றும் வனச்சரக அலுவலர் சரவணகுமார் ஆகியோரின் அறிவுரையின்பேரில் சிவசைலம் பிரிவு வனவர் முருகசாமி, கோவிந்தபேரி பீட் வனக்காவலர் வீரணன் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் அப்பகுதிக்கு சென்று ராஜநாகத்தை பிடித்து, சிவசைலம் பீட் கல்லாறு பகுதியில் கொண்டுவிட்டனர். இதுபோன்ற வனஉயிரினங்களை மீட்பதற்கு பொதுமக்கள் கடையம் வனச்சரக அலுவலகத்துக்கு 04634-283165 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்துள் ளனர்.

வனஉயிரினங்களை மீட்பதற்கு கடையம் வனச்சரக அலுவலகத்துக்கு 04634-283165 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in