பெண் குழந்தைகளின் நலனுக்காக - செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தை தொடங்க வேண்டும் : விழுப்புரம் ஆட்சியர் அறிவுரை

பெண் குழந்தைகளின் நலனுக்காக  -  செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தை தொடங்க வேண்டும்  :    விழுப்புரம் ஆட்சியர் அறிவுரை
Updated on
1 min read

பெண் குழந்தைகளின் பாதுகாப்பான வாழ்க்கை நலனுக்காக “செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தை தொடங்கவேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது:

"செல்வ மகள் சேமிப்புத் திட்டம்” இந்திய அஞ்சல் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 2 வயது முதல் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு குறைந்த பட்சம் ரூ.250 செலுத்தி கணக்கினை தொடங்கலாம்.

கணக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து 15 வருடம் வரை இக்கணக்கில் தொகையினை செலுத்தி வரவு வைக்கலாம். கணக்கில் உள்ள இருப்பு வைப்பு தொகையிலிருந்து 50% உயர்கல்விக்காக (10ம் வகுப்பு முடித்தபின் அல்லது 18 வயது பூர்த்தியான பின்) பெற்றுக்கொள்ளலாம். இக்கணக்கின் முதிர்வு தொகையினை, கணக்கு தொடங்கி 21 வருடம் நிறைவடைந்த பிறகோ அல்லது அப்பெண்குழந்தையின் திருமணம் இவற்றில் எது முதலில் வருகிறதோ அன்று பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு" www.indiapost.gov.in" என்ற இணைய தளத்தை காணலாம் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in