Published : 21 Sep 2021 03:21 AM
Last Updated : 21 Sep 2021 03:21 AM

மத்திய பாஜக அரசை கண்டித்து - திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் :

மத்திய அரசை‌ கண்டித்து திமுக கூட்டணி கட்சி சார்பில், காட்பாடியில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் தலைமையில் நேற்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அடுத்த படம்: செய்யாறில் திமுக எம்எல்ஏ ஜோதி தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர்

மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளை கண்டித்து திமுகவினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி வருவது, பொருளாதார சீரழிவு, பொதுத்துறை நிறுவனங்களை விற்பது உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், பங்கேற்ற கட்சி நிர்வாகிகள் தங்கள் வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

வேலூர் மத்திய மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமார் தலைமையில் காட்பாடி காந்தி நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். இதில், பகுதி செயலாளர்கள் பரமசிவம், சுனில்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், பெட்ரோல் டீசல் விலை உயர்வு கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

அதேபோல், வேலூர் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் தலைமையில் காந்திநகரில் உள்ள அவரது வீட்டின் முன்பாக கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் எம்எல்ஏ ஜோதி தலை மையிலும், வந்தவாசியில் எம்எல்ஏ அம்பேக்குமார் தலைமையிலும், திருவண் ணாமலையில் மாவட்ட அவைத் தலைவர் வேணுகோபால் தலைமையிலும், செங்கம் அடுத்த பெரும்பாக்கத்தில் எம்எல்ஏ கிரி தலைமையிலும் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், ஆரணி, தண்டராம்பட்டு, போளூர், கலசப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்மை சட்டங்களை எதிர்த்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x