காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற சிஐடியு மாநாட்டில் தீர்மானம் :

காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற சிஐடியு மாநாட்டில் தீர்மானம் :
Updated on
1 min read

நாமக்கல் மாவட்ட மோட்டார் இன்ஜினியரிங் தொழிலாளர்கள் சங்க (சிஐடியு) மாவட்ட மாநாடுஎலச்சிபாளையத்தில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் பி.காளியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் வி.பழனிவேல் வரவேற்றார். மாநிலகுழு உறுப்பினர்எஸ்.கே.தியாகராஜன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கட்டுப்படுத்தி ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரவேண்டும். தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்.

மோட்டார் வாகன சட்டத்திருத்தம் மூலம் மோட்டார் தொழில்களை நசுக்குவதை கைவிட வேண்டும். மோட்டார் தொழிலில் ஈடுபடும் அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் நலவாரிய பணப் பயன்களை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in