Published : 20 Sep 2021 03:19 AM
Last Updated : 20 Sep 2021 03:19 AM

அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு 5 மாத நிலுவை ஊதியம் வழங்கக் கோரிக்கை :

கவுரவ விரிவுரையாளர்களுக்கு, நிலுவையில் உள்ள ஊதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, அம்பேத்கர் மக்கள் இயக்க மாநில தலைவர் அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள அரசு கலை-அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரிகளில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கவுரவவிரிவுரையாளர்களாக பணிபுரிகின்றனர். மாதம் ரூ.20 ஆயிரம் என்ற ஊதியத்தில் பணிபுரியும் அவர்கள், கரோனா காலத்திலும் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு பாடங்களை நடத்தினர்.

ஆனால், அவர்களுக்கு ஏப்ரல் முதல் 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், கவுரவ விரிவுரையாளர்கள், குடும் பத்தை நடத்த முடியாத சூழலில், மன அழுத்தத்தில் உள்ளனர். எனவே, தமிழக அரசு கவுரவ விரிவுரையாளர்களுக்கு நிலுவையில் உள்ள 5 மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x